ரெயில் நிலையங்களில் ஓட்டல்களை திறக்க அனுமதி - ரெயில்வே வாரியம் உத்தரவு


ரெயில் நிலையங்களில் ஓட்டல்களை திறக்க அனுமதி - ரெயில்வே வாரியம் உத்தரவு
x
தினத்தந்தி 22 May 2020 3:00 AM IST (Updated: 22 May 2020 12:39 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் நிலையங்களில் உள்ள ஓட்டல்களையும், புத்தக நிலையங்களையும் திறக்க அனுமதி அளித்து ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், ரெயில் நிலையங்களில் உள்ள ஓட்டல்கள், புத்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஜூன் 1-ந்தேதி முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரெயில் நிலையங்களில் உள்ள ஓட்டல்களையும், புத்தக நிலையங்களையும் திறக்க அனுமதி அளித்து ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு ரெயில்வே மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும், ஓட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்றும், பயணிகள் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கக்கூடாது என்றும் ரெயில்வே வாரியம் கண்டிப்பாக கூறியுள்ளது.

Next Story