கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம்- ரிசர்வ் வங்கி ஆளுநர்
வீடு, வாகன கடன்களுக்கான கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ரிசர் வங்கி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
- அடுத்த சில மாதங்களில் பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர வாய்ப்பு உள்ளது.
- சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
- ரிசர்வ் வங்கியால் குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் அளிக்கும்
- ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும் மாநிலங்களுக்கான நிதிப் பிரச்சினைகளை சரி செய்யவும் வங்கி நடவடிக்கை
- 2020-21 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும்.
- தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- மூலதன கடன்கள் அளிக்கப்படும்.
- மேலும் 3 மாதங்களுக்கு சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு
- மாதத் தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது.
- கால அவகாசம் ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டெழும்
- உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும்.
- தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 சதவிகிதம் குறைந்துள்ளது.
- ஜிடிபி வளர்ச்சி வரும் காலாண்டில் எதிர்மறையாக இருக்கும்.
- வீடு, வாகன கடன்களுக்கான கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. என்று ரிசர் வங்கி தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story