"பிரதமர் மோடியின் நிவாரண அறிவிப்பில் தெளிவில்லை" - முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து
பிரதமர் மோடியின் நிவாரண அறிவிப்பில் தெளிவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தை புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. 72 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.
அம்பன் சூப்பர் புயலின் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை கொல்கத்தா சென்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அம்பன் புயலால் மேற்கு வங்காளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள அரசுக்கு முதல்கட்டமாக ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி, பிரதமரின் அறிவிப்பில் தெளிவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயிரம் கோடி ரூபாய் முன் பணம் என்று கூறும் அதே நேரம், இது மொத்த தொகையாகவும் இருக்கலாம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளதாக மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். அம்பன் புயலால், மேற்கு வங்க மாநிலத்திற்கு ஒரு லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story