தேசிய செய்திகள்

கர்நாடகாவில் புதிதாக 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Karnataka records 216 new COVID-19 cases

கர்நாடகாவில் புதிதாக 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் புதிதாக 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் புதிதாக 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.  நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. கர்நாடகா மாநிலத்திலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு 3 முறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நான்காவது முறை ஊரடங்காக இன்று (ஞாயிற்றுக் கிழமை) ஒரு நாள் முழு ஊரடங்கும், வரும் 31ம் தேதி வரை தொடர் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கர்நாடகாவில் இன்று புதிதாக 216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,959 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 608 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 
 


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 1,000 ஆங்கில பள்ளிகளை திறக்க முடிவு - மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு
கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 1,000 ஆங்கில பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மந்திரி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.
2. மராட்டியத்தில் புதிதாக 2,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று புதிதாக 2,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. அமெரிக்காவில் புதிதாக 20,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 20,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகத்தில் நாளை முழு ஊரடங்கு - பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது
கர்நாடகத்தில் நாளை(ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படு கிறது. இதனால் பால், மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. மேலும் பஸ், ரெயில், ஆட்டோக் கள் ஓடாது.