"வரும் காலங்களில் பிரச்சனைகளை திறமையுடன் கையாளுவோம்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி


வரும் காலங்களில் பிரச்சனைகளை திறமையுடன் கையாளுவோம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி
x
தினத்தந்தி 24 May 2020 9:07 PM IST (Updated: 24 May 2020 9:07 PM IST)
t-max-icont-min-icon

எந்த வகையான இக்கட்டான சூழ்நிலையையும், கேரளா திறமையுடன் கையாளும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளா,

கேரளாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அங்கு நோய்த்தொற்று படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது.  

கேரளாவில் இன்று புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து  கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 847 ஆக உள்ளது. தற்போது வரை 520 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்கு 322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கேரள மாநிலத்தின் செயல்பாடு சிறப்புடன் விளங்கிய நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார். 

மேலும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே தற்போது கேரளாவில் கொரோனா தொற்று இருப்பதாகவும், அவர்களையும் கேரள அரசு அந்நியப்படுத்தாமல் சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாகவும்,  எந்த வகையான இக்கட்டான சூழ்நிலையையும், கேரளா  திறமையுடன் கையாளும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

Next Story