கொரோனா தடுப்பு மருந்து கண்டறிய எனது உடலை பயன்படுத்தி கொள்ளுங்கள் பிரதமருக்கு, கர்நாடக மாணவர் உருக்கமான வேண்டுகோள்


கொரோனா தடுப்பு மருந்து கண்டறிய எனது உடலை பயன்படுத்தி கொள்ளுங்கள் பிரதமருக்கு, கர்நாடக மாணவர் உருக்கமான வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 May 2020 12:27 AM IST (Updated: 25 May 2020 12:27 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டறிய எனது உடலை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, கதக் மாணவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் மருந்து மற்றும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிக்காக தனது உடலை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கர்நாடகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அதாவது கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் சிரகட்டி தாலுகா பெல்லட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரேஷ் குருபத்தி (வயது 20). இவர் தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொடர்பான மருந்து மற்றும் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிக்காக மருத்துவ பரிசோதனைக்கு என்னுடைய உடலை பயன்படுத்தி கொள்ளுங்கள், மருந்து கண்டுபிடிக்கும் பணிக்காக எனது உடலை எந்த விதமான நிபந்தனையும் இன்றி அளிக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

கதக்கில் உள்ள ஐ.டி.ஐ. கல்லூரியில் வீரேஷ் குருபத்தி படித்து வருகிறார். பிரதமருக்கு வீரேஷ் எழுதி உள்ள கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.


Next Story