டெல்லியில் புதிதாக 635 பேருக்கு கொரோனா தொற்று


டெல்லியில் புதிதாக 635 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 25 May 2020 2:12 PM IST (Updated: 25 May 2020 2:12 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் புதிதாக 635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.  இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் வரிசையில் டெல்லி 4-ஆம் இடத்தில் உள்ளது. 

இந்த நிலையில், டெல்லியில் இன்று ஒரே நாளில் மேலும் 635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,053 - ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 276 ஆக உள்ளது. 

Next Story