டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு தனியாக விமானத்தில் வந்த 5-வயது சிறுவன்!
டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு தனியாக விமானத்தில் 5-வயது சிறுவன் வருகை தந்தது விமானப்பயணிகளை நெகிழச்செய்தது.
இந்தியாவில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு 5 வயது சிறுவன் சிறப்பு பிரிவு மூலமாக பெங்களூருவுக்கு வந்துள்ளான். தனியாளாக வந்து, விமான நிலையத்தில் சிறுவன் நின்ற காட்சி பலரது மனதையும் கொள்ளை கொண்டுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 5 வயது சிறுவன் விகான் சர்மா, விடுமுறைக்காக டெல்லியில் உள்ள தனது தாத்தா - பாட்டி வீட்டிற்கு கடந்த பிப்ரவரியில் சென்றுள்ளான். இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு ஏற்பட்டதால் விகான் டெல்லியில் சிக்கிக் கொண்டார். உள்நாட்டு போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கியது.
இதனால், சிறுவன் அவரது தாத்தா - பாட்டி, டெல்லி விமான நிலையத்தில் சிறப்பு பிரிவு மூலமாக பெங்களூருவுக்கு விமானத்தில் வழியனுப்பினர். அதில் சிறப்பு பிரிவில், டெல்லியில் இருந்து பெங்களூரு விமானத்தில் அந்த சிறுவன், மாஸ்க் மற்றும் கையுறை அணிந்து தனியாக பயணம் செய்து, 3 மாதங்களுக்கு பிறகு தனது தாயாரை சந்தித்தான்.
Related Tags :
Next Story