சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும்: மத்திய மந்திரி அறிவிப்பு
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என்று மத்திய மந்திரி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு சில பாடங்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை. சில பகுதிகளில் தேர்வு நடத்தப்படவில்லை. எனவே அந்த பகுதிகளிலும் மற்றும் மீதம் உள்ள பாடங்களுக்கும் வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரம் மையங்களில் தேர்வு நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும், மாணவர்களின் பயண தூரத்தை குறைக்கும் வகையிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார்.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படமாட்டாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story