காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்திய வீரர்கள் பதிலடி


காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்திய வீரர்கள் பதிலடி
x
தினத்தந்தி 26 May 2020 9:00 PM GMT (Updated: 2020-05-27T01:31:32+05:30)

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

ஸ்ரீநகர், 

காஷ்மீரின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்ட எல்லையோர கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளில் நேற்று பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தியபடி இந்திய எல்லையை நோக்கி அவர்கள் வந்தனர். பாகிஸ்தான் வீரர்களின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த சண்டையில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Next Story