உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி.க்கு கொரோனா பாதிப்பு


உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி.க்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2020 3:00 AM IST (Updated: 1 Jun 2020 2:32 AM IST)
t-max-icont-min-icon

உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி.க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி.க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் பணியாற்றும் 2 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுவதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story