ஒரே நாளில் 692 விமானங்களில் 64,651 பேர் பயணம்


ஒரே நாளில் 692 விமானங்களில் 64,651 பேர் பயணம்
x
தினத்தந்தி 3 Jun 2020 2:00 AM IST (Updated: 3 Jun 2020 12:52 AM IST)
t-max-icont-min-icon

ஒரே நாளில் 692 விமானங்களில் 64,651 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

கடந்த மாதம் 25-ந் தேதி, உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. 8-வது நாளான கடந்த 1-ந் தேதி 692 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. அவற்றில் 64 ஆயிரத்து 651 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த தகவலை மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார். முந்தைய நாளில், 501 விமானங்கள் மூலம் 44 ஆயிரத்து 593 பேர் பயணம் செய்துள்ளனர். எனவே, உள்நாட்டு விமான சேவை வேகம் எடுத்திருப்பது வரவேற்புக்குரிய அறிகுறி என்று ஹர்தீப்சிங் பூரி கூறியுள்ளார்.

Next Story