குஜராத் ரசாயன ஆலையில் விபத்து: பாய்லர் வெடித்து 5 தொழிலாளர்கள் பலி
குஜராத் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர்.
பாருச்,
குஜராத் மாநிலம் பாருச் மாவட்டம் தகஜ் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் நேற்று பாய்லர் திடீரென வெடித்தது. இதனால் அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. உடனே மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் ஆபத்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ரசாயன ஆலையில் இருந்து விஷவாயு வெளியாகும் அபாயம் இருப்பதால், அருகே உள்ள குடியிருப்புகளில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story