கடன் தவறியவர்களுக்கு சலுகை: திவால் சட்டத்தை திருத்தி அவசர சட்டம் வெளியீடு - மத்திய அரசு நடவடிக்கை


கடன் தவறியவர்களுக்கு சலுகை: திவால் சட்டத்தை திருத்தி அவசர சட்டம் வெளியீடு - மத்திய அரசு நடவடிக்கை
x

கடன் செலுத்த தவறியவர்களுக்கு சலுகையாக, திவால் சட்டத்தை திருத்தி மத்திய அரசு அவசர சட்டம் வெளியிட்டுள்ளது.


புதுடெல்லி, 

மத்திய அரசு கொண்டு வந்த திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டப்படி, ஒருவர் கடனை திருப்பிச் செலுத்த ஒரு நாள் தவறினாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோர முடியும். இந்நிலையில், அந்த சட்டத்தில் திருத்தம் செய்து, மத்திய அரசு நேற்று அவசர சட்டம் பிறப்பித்தது.

அவசர சட்டத்தின்படி, கொரோனா தொடர்பாக ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 25 அல்லது அதற்கு பிறகு ஓராண்டுவரை கடனை திருப்பி செலுத்த தவறியவர்களுக்கு எதிராக திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது.

Next Story