வழிபாட்டுதலங்கள் 8-ந் தேதி முதல் திறப்பு: விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
வழிபாட்டு தலங்கள் 8-ந் தேதி முதல் திறக்கப்படுகின்றன. இதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டது. இந்த ஊரடங்கு நாடு முழுவதும் 4 முறை நீட்டிக்கப்பட்டது. 5-வது முறை கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் இந்த மாதம் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அரசு கடந்த 30-ந் தேதி வெளியிட்டது.
அப்போது நாடு முழுவதும் கட்டுப்பாடு பகுதிகள் தவிர்த்து பிற இடங்களுக்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது வழிபாட்டு தலங்கள் 8-ந் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுகின்றன.
அப்போது பின்பற்றவேண்டிய விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* வழிபாட்டு தலங்களுக் குள் கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாத பக்தர் கள், ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
* சரியானபடிக்கு கூட்டத்தை நிர்வகிக்க வேண்டும்.
* நுழைவாயிலில் சானிடைசர் திரவம் வைத்திருக்கவேண்டும். பக்தர்களை வெப்ப பரிசோதனை நடத்தியே கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும்.
* முகக்கவசம் அணிந்தவர்களை மட்டுமே வழிபாட்டுதலத்துக்குள் அனுமதிக்க வேண்டும். தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
* பதிவு செய்யப்பட்ட இசை அல்லது பாடல்களை ஒலிபரப்பலாம். பாடகர், பாடகர் குழுக்கள் பாட அனுமதி இல்லை.
* பிரசாதங்கள் வழங்கக்கூடாது. புனித நீர் தெளித்தல் கூடாது.
* புனித நூல்களை, வழிபாட்டு தலங்களில் உள்ள சிலைகளை தொடக்கூடாது.
* வழிபாட்டு தலங்களுக்குள் ஒருவருக்கொருவர் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றை செய்யக்கூடாது.
* வழிபாட்டு தலங்களுக் குள் முதியோர், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அனுமதி கிடையாது.
வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், ஓட்டல்கள், அலுவலகங்கள் திறப்புக்கும் இதுபோன்ற விதிமுறைகள் பொருந்தும்.
Related Tags :
Next Story