கொரோனா வார்டில் மன அழுத்தத்தை போக்க நடனமாடும் டாக்டர்கள் - வைரலாகும் வீடியோ


கொரோனா வார்டில் மன அழுத்தத்தை போக்க நடனமாடும் டாக்டர்கள் - வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 9 Jun 2020 3:30 AM IST (Updated: 9 Jun 2020 1:55 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வார்டில் மன அழுத்தத்தை போக்க டாக்டர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

பெங்களூரு, 

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில் டாக்டர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக பணியாற்றும் நிலை உள்ளது.

இவர்கள் தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாமல், வெளியிலும் செல்ல முடியாமல் தொடர்ந்து கொரோனா வார்டில் பணியாற்றுவதால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் டாக்டர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், பணியிலும் முழுமையாக ஈடுபட முடியாத நிலை உள்ளது.

இதனை அறிந்த பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம், கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்களுக்கு புதுவிதமான சிகிச்சை முறையை பரிந்துரை செய்துள்ளது. அதாவது டாக்டர்கள் கொரோனா வார்டில் பணி நேரம் முடிந்தவுடன் தினமும் 30 நிமிடங்கள் திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆட வேண்டும்.

இதனை கட்டாயமாக அனைவரும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, உற்சாகத்துடன் பணியாற்ற முடியும் என சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து பணி நேரம் முடிந்தவுடன் ஆண் மற்றும் பெண் டாக்டர்கள் திரைப்பட பாடல்களுக்கு மகிழ்ச்சியுடன் நடனம் ஆடினர். இதனால் தங்களது மன அழுத்தம் சற்று குறைந்து, உற்சாகமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்பட பாடல்களுக்கு டாக்டர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story