டாக்டர்களுக்கு சம்பளம் வழங்காத பிரச்சினை: ‘கொரோனா போர் வீரர்களை மகிழ்ச்சி அடைய செய்யவில்லை’ சுப்ரீம் கோர்ட்டு வேதனை


டாக்டர்களுக்கு சம்பளம் வழங்காத பிரச்சினை: ‘கொரோனா போர் வீரர்களை மகிழ்ச்சி அடைய செய்யவில்லை’ சுப்ரீம் கோர்ட்டு வேதனை
x
தினத்தந்தி 13 Jun 2020 1:22 AM IST (Updated: 13 Jun 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தல் விவகாரம் தொடர்பாகவும் விவாதம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ‘சுகாதார பணியாளர்களுக்கு தங்குமிடம், சம்பளம் வழங்கப்படாத பிரச்சனையை மத்திய-மாநில அரசுகள் தீர்த்து வைத்திருக்க வேண்டும். நீதிமன்றங்கள் அதை தீர்ப்பதாக இருக்கக்கூடாது. சுகாதாரப் பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கூடுதல் பணத்தை செலவிடுங்கள்’ என்று கூறினர்.

மேலும், கொரோனா போரில் மத்திய அரசு வீரர்களை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
1 More update

Next Story