இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 11,502 ஆக பதிவாகியுள்ளது.
புதுடெல்லி
இந்தியாவில் மேலும் 11 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் 11,502 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 332,424 ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9520 ஆக உள்ளது.
நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி, 169,797 அதாவது, வைரஸால் பாதிக்கப்பட்டு 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தொற்றுநோயிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த இந்தியாவில் விதிக்கப்பட்ட எட்டு வார ஊரடங்கு தொற்றுநோயின் உச்சத்தை 34-76 நாட்கள், அதாவது நவம்பர் வரை மாற்றியது, மற்றும் ஊரடங்கின் முடிவில் பாதிப்புகளின் எண்ணிக்கையை 69-97 சதவீதமாக குறைத்தது
Related Tags :
Next Story