இந்தியாவில் இதுவரை மொத்தம் 57.74 லட்சம் கொரோனா பரிசோதனைகள்


இந்தியாவில் இதுவரை  மொத்தம் 57.74 லட்சம் கொரோனா பரிசோதனைகள்
x
தினத்தந்தி 15 Jun 2020 12:00 PM IST (Updated: 15 Jun 2020 12:54 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் மொத்தம் 57,74,133 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,502 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 332,424 ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9520 ஆக உள்ளது.

டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில்  2,224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 56 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.. இதுவரை அங்கு 41,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,327 பேர் உயிரிழந்துள்ளனர்; 15,823 பேர் குணமடைந்துள்ளனர்.

* மராட்டியம்- 3,390
* தமிழகம் - 1,974
* டெல்லி - 2,224
* ஜம்மு காஷ்மீர் - 163
* குஜராத் - 511
* அரியானா - 459
* மேற்குவங்காம் - 389
* உத்தரபிரதேசம் - 497
* ராஜஸ்தான் - 293
* கர்நாடகா - 176
* மத்தியபிரதேசம் - 161
* தெலங்கானா - 237
* சத்தீஸ்கார் -  113
* ஆந்திரா - 253
* பீகார் - 186
* பஞ்சாப் - 77
* அசாம் - 106
* ஜார்க்கண்ட் - 37
* உத்தரகாண்ட் - 31
* கோவா - 41
* மணிப்பூர் - 9

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்க்கான 1,15,519 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 57,74,133 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

1 More update

Next Story