மேகாலயாவில் வழிபாட்டு தலங்களில் திருமணத்துக்கு அனுமதி


மேகாலயாவில் வழிபாட்டு தலங்களில் திருமணத்துக்கு அனுமதி
x
தினத்தந்தி 17 Jun 2020 2:00 AM IST (Updated: 17 Jun 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

மேகாலயாவில் வழிபாட்டு தலங்களில் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஷில்லாங், 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தேவாலயங்களில் திருமணம் நடத்துவது வழக்கம். ஆனால், கொரோனா காரணமாக, தேவாலயங்கள் மூடப்பட்டதால், நிறைய திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டன.

இதை கருத்திற்கொண்டு, திருமணம் நடத்துவதற்கு மட்டும் மத வழிபாட்டு தலங்களில் அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு மதத்தினரும் வேண்டுகோள் விடுத்தனர். 

இதுகுறித்து விவாதிக்க ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மத வழிபாட்டு தலங்களில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி கிடையாது என்று துணை முதல்-மந்திரி பிரிஸ்டோன் டைன்சாங் தெரிவித்தார்.

Next Story