ஆணி பதித்த இரும்பு ஆயுதங்களை பயன்படுத்தி சீன வீரர்கள் இந்திய ராணுவத்தினரை தாக்கினார்களா?
கலவான் பள்ளதாக்கு தாக்குதலில் ஆணி பதித்த இரும்பு ஆயுதங்களை பயன்படுத்தி சீன வீரர்கள் இந்திய ராணுவத்தினரை தாக்கினார்களா?
புதுடெல்லி
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஆணி பதித்த இரும்பு ராடை சீன ராணுவத்தினர் பயன்படுத்தினார்கள் என்று சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்று வைரலானது.
இந்தியா-சீனாவிற்கிடையே, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எல்லையில் மோதல் நிலவி வருகிறது. கடந்த மே 5-ஆம் தேதி லடாக்கிலும், சிக்கிமிலும் சீனா அத்துமீறியது. இதன் காரணமாக சீனாவிற்கு பதிலடி கொடுக்க, இந்தியா தயாராகி வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் லடாக்கில் இரண்டு நாட்கள் முன் நடந்த சண்டையில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்இந்த சண்டை லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் நடந்தது. மொத்தம் 8 மணி நேரம் நடந்த இந்த சண்டையில், இரண்டு நாடுகளும் துப்பாக்கிகள், குண்டுகள் எதையும் பயன்படுத்தவில்லை
முழுக்க முழுக்க கம்பிகள், குச்சிகள், இரும்பு ராடுகள், கற்களை வைத்து தாக்கியுள்ளனர். இதில்தான் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகியுள்ளனர்.இந்த தாக்குதலை நிகழ்த்துவதற்காக சீன இராணுவம் முழுக்க முழுக்க தயாராகி வந்து இருக்கிறது இதில் இருந்தே தெரிகிறது. அதாவது சீன இராணுவம் முன்பே திட்டமிட்டு தயாராகி லடாக் பகுதிக்கு வந்து இருக்கிறது.
இதற்காக வித்தியாசமான ஆயுதங்களை சீனா உருவாக்கி உள்ளது. அதாவது அந்த எல்லைக்கு வந்த 300 சீன வீரர்கள் எல்லோரும் வித்தியாசமான ஆயுதங்களோடு அங்கு வந்துள்ளனர்.அது தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது வெளியாகியுள்ளது.அதில், கட்டிடம் கட்டும் இரும்பு கம்பியில் முற்களை வைத்து வெல்டிங் செய்து இருக்கிறார்கள். கூரான முற்கள் போல இந்த ஆயுதங்களை உருவாக்கி உள்ளனர்.
அதேபோல் கஜா ஆயுதம் போலவும் நிறைய ஆயுதங்களை உருவாக்கி கொண்டு வந்துள்ளனர். இதை வைத்துதான் இந்திய வீரர்களை சீனர்கள் தாக்கி உள்ளனர்.
இதனால் தான் இந்திய தரப்பில் மரணங்கள் ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும் ஒரு நாடு இந்த ஆயுதங்களை கொண்டு வர வாய்ப்பு இல்லை.இதனால் சீன இராணுவம் திட்டமிட்டு இந்த ஆயுதங்களை கொண்டு வந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. ஆனால் இதன் உண்மைத்தன்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் தலைமை அலுவலக அந்த புகைப்படம் போலி, அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை“ என்று விளக்கமளித்துள்ளனர்.
இதனிடையே இந்திய வீரர்கள் உயிரிழப்பு குறித்து டுவிட்டரில் வீடியோ பேச்சு ஒன்றை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில் நமது வீரர்களை எல்லைக்கு ஆயுதமின்றி அனுப்பியது யார் என்றும்,வீரர்கள் உயிரிழப்புக்கு யார் பொறுபேற்பது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல்காந்தியின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எல்லையில் இருக்கும் படைவீரர்கள் எப்போதும் ஆயுதங்களை வைத்திருப்பர் என்றும், குறிப்பாக நிலைகளை விட்டு விலகும் போது அவர்களிடம் ஆயுதம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கும் வழக்கத்தின்படியே துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். 1996 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் படியே, இரு நாடுகளும் இந்த நடைமுறையை பின்பற்றவதகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story