கேரளாவில் மேலும் 118 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் மேலும் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 118 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்தம் 2,912 பேர் மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கேரளாவில் இதுவரை 21 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
நேற்று மட்டும் 92 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 1380- பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
மலப்புரம் மாவட்டத்தில் 18 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 17 பேருக்கும் ஆலப்புழா மாவட்டத்தில் 13 பேருக்கும், எர்ணாகுளத்தில் 11 பேருக்கும் பாலக்காட்டில் 10 பேருக்கும், பத்தனம்திட்டாவில் 10 பேருக்கும், திருவனந்தபுரம், கண்ணூர் மாவட்டங்களில் தலா 8 பேருக்கும் நேற்று புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
Related Tags :
Next Story