இந்திய சீன எல்லைக்கோடு பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது- ராணுவ உயர் அதிகாரி தகவல்


இந்திய சீன எல்லைக்கோடு பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது- ராணுவ உயர் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 19 Jun 2020 10:00 PM GMT (Updated: 19 Jun 2020 9:28 PM GMT)

இந்திய சீன எல்லைக்கோடு பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று ராணுவ உயர் அதிகாரி தகவல் தெரிவித்தார்.

ஸ்ரீநகர்,

இந்திய ராணுவத்தின் 15 வது படைப்பிரிவு தலைமை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: 

லடாக் விவகாரத்தை பொறுத்தவரை, 14 வது படைப்பிரிவு கவனித்து வருகிறது. நாங்களும் அதில் ஒரு அங்கம்தான். நான் அறிந்தவரை, எல்லைக்கோடு பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றை யெல்லாம் இந்திய ராணுவம் செய்துள்ளது. அதற்கான திறனும் ராணுவத்துக்கு இருக்கிறது. இதுபோன்ற மோதல்கள் எல்லாம் தற்செயலாக நடப்பவைதான் என்று ராணுவத்துக்கு தெரியும்.

அதே சமயத்தில், இந்தியா பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலைமை சீராக இருக்கிறது. எல்லைக்கு அப்பால் இருந்தோ, காஷ்மீர் பகுதியிலோ எந்த அசம்பாவிதமும் நடக்காதவகையில் உஷாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story