புதுச்சேரியில் 52 பேருக்கு கொரோனா பாதிப்புகள் இருப்பது உறுதி
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரிசோதனையில் 52 பேருக்கு பாதிப்புகள் இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளன.
புதுச்சேரி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்லாமல் இருக்கும்படி வலியுறுத்தப்படுகிறது. தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுவோரை போலீசார் எச்சரிக்கை செய்வதுடன், அபராதம், வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பற்றிய மருத்துவ பரிசோதனையில் 52 புதிய பாதிப்புகள் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளன.
இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரசால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 338 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 131 பேர் மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி சென்றுள்ளனர். 200 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. இந்த தகவலை புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்பநல சேவைகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story