கொரோனா பாதிப்பு தருணத்தில் உடல், மனநலனுக்கு யோகா பயிற்சி உதவும்; டுவிட்டரில் ஜனாதிபதி பதிவு


கொரோனா பாதிப்பு தருணத்தில் உடல், மனநலனுக்கு யோகா பயிற்சி உதவும்; டுவிட்டரில் ஜனாதிபதி பதிவு
x
தினத்தந்தி 21 Jun 2020 3:00 PM IST (Updated: 21 Jun 2020 3:00 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு தருணத்தில் யோகா பயிற்சி மேற்கொள்வது உடல் மற்றும் மனநலனுக்கு உதவும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இதனை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், சர்வதேச யோகா தினத்தில் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.  யோகாவின் பழமையான அறிவியல் ஆனது உலகத்திற்கு நமது இந்திய நாடு அளித்த பரிசு ஆகும்.

யோகா பயிற்சியை அதிக அளவிலான மக்கள் செய்து வருவது காண்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  மனஅழுத்தம் மற்றும் சிக்கலான சூழல், அதிலும் குறிப்பிடும்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் யோகா பயிற்சி மேற்கொள்வது, உடலை கட்டுக்கோப்புடன் வைத்து கொள்வதற்கும் மற்றும் மனநலனுக்கு உதவும் வகையிலும் இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று யோகா பயிற்சி செய்வது போன்ற புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.
1 More update

Next Story