குஜராத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,664 ஆக உயர்வு


குஜராத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,664 ஆக உயர்வு
x
தினத்தந்தி 21 Jun 2020 10:13 PM IST (Updated: 21 Jun 2020 10:13 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,664 ஆக உயர்வடைந்து உள்ளது.

காந்திநகர்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதனை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.  நாட்டில் மராட்டியம் அதிக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை கொண்டுள்ளது.  இதில் முதலிடத்தில் உள்ளது.  தொடர்ந்து டெல்லி, தமிழகம் ஆகியவை இந்த வரிசையில் உள்ளன.

இந்நிலையில், குஜராத்தில் 580 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,317 ஆக உயர்வடைந்து உள்ளது.  25 பேர் பலியான நிலையில், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,664 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.  இதுவரை 19,357 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.
1 More update

Next Story