சீனா மோதல் விவகாரம்- சரண்டர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம்


சீனா  மோதல் விவகாரம்- சரண்டர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம்
x
தினத்தந்தி 21 Jun 2020 5:44 PM GMT (Updated: 21 Jun 2020 5:45 PM GMT)

லடாக் விவகாரத்தில் சீனாவிடம் பிரதமர் மோடி சரண்டர் ஆகிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,
லடாக் விவகாரத்தில் சீனாவிடம் பிரதமர் மோடி சரண்டர் ஆகிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டதற்கு பாஜக கடும் எதிர்வினைகளை ஆற்றியுள்ளது.  லடாக் எல்லையியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே அண்மையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இந்த விவகாரத்தை வைத்து மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், இன்று ஜப்பான் டைம்ஸ் எனும் நாளேட்டில் வெளிவந்துள்ள கட்டுரையை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி என ராகுல் காந்தி சாடியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த டுவிட்டுக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். 


Next Story