சீனாவுடன் மோதல் எதிரொலி:முப்படைகளுக்கும் அவசரகால நிதி அதிகாரம் -ரூ.500 கோடி வரை ஆயுதங்கள் வாங்க முடியும்


சீனாவுடன் மோதல் எதிரொலி:முப்படைகளுக்கும் அவசரகால நிதி அதிகாரம் -ரூ.500 கோடி வரை ஆயுதங்கள் வாங்க முடியும்
x
தினத்தந்தி 22 Jun 2020 1:14 AM IST (Updated: 22 Jun 2020 1:14 AM IST)
t-max-icont-min-icon

முப்படைகளுக்கும் அவசரகால நிதி அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ.500 கோடி வரையிலான ஆயுதங்களை படைகளே வாங்க முடியும்.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதலால் இருநாட்டு எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இருநாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.

அதேநேரம் அங்கு எத்தகைய சூழலையும் சமாளிக்க முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. எல்லையில் சீனா வாலாட்டினால் தகுந்த பதிலடி கொடுக்குமாறு முப்படைகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக படைகளுக்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில் முப்படைகளும் தயார் நிலையை வலுப்படுத்துவதற்க ாக குறுகிய காலத்தில் தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் தளவாடங்களை வாங்க வசதியாக முப்படைகளுக்கும் அவசரகால நிதி அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ரூ.500 கோடி வரையிலான ஆயுதங்களை படைகளே வாங்க முடியும். இதைப்போல ஆயுதங்கள் வாங்குவதில் தாமதத்துக்கு வழிவகுக்கும் சட்ட நடவடிக்கைகளையும் நீக்கி உத்தரவிட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.அரசு வழங்கி உள்ள அவசரகால நிதி அதிகாரத்தை பயன்படுத்தி வெடிபொருட்கள் வாங்கப்போவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


Next Story