புதுச்சேரியில் ஒரே நாளில் 59 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல்


புதுச்சேரியில் ஒரே நாளில் 59 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2020 9:34 AM GMT (Updated: 2020-06-24T15:04:56+05:30)

புதுச்சேரியில் ஒரே நாளில் 59 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்து உள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, புதுச்சேரியில் நேற்று 441 நபர்களிடம் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டது.  இதில், 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதுவரை 276 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நாளை முதல் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலம் கிராமப்புறங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், கொரோனா குறித்த அச்சம் மக்களுக்கு தேவை என்றும் கூறிய அவர், தேவையின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

Next Story