டெல்லி காமன்வெல்த் விளையாட்டு மைதானத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பு


டெல்லி காமன்வெல்த் விளையாட்டு மைதானத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பு
x
தினத்தந்தி 2 July 2020 10:39 AM IST (Updated: 2 July 2020 10:44 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி காமன்வெல்த் விளையாட்டு மைதானத்தில் 600 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் வேகம் கட்டுக்குள் வந்த பாடில்லை. டெல்லியில் இதுவரை 89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மராட்டியம் மற்றும் தமிழகத்திற்கு அடுத்தபடியாக நாட்டில் அதிக கொரோனா பாதிப்புடன் டெல்லி மூன்றாம் இடம் வகிக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் டெல்லியில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு மைதானத்தில் 600 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு இன்று வந்த முதல் மந்திரி கெஜ்ரிவால், துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா  ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கெஜ்ரிவால்,  இந்த சிகிச்சை மையம் 600 படுக்கைகளை கொண்டதாகும். 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஏனைய 400 படுக்கைகளும் விரைவில்  தயார் செய்யப்படும். ஓரிரு நாள்களில் இந்த சிகிச்சை மையம் செயல்படத்துவங்கும்” என்றார்.

Next Story