மராட்டியத்தில் சிறைக்கைதிகள் 363 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு


மராட்டியத்தில் சிறைக்கைதிகள் 363 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு
x
தினத்தந்தி 2 July 2020 11:12 AM IST (Updated: 2 July 2020 11:12 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் சிறைக்கைதிகள் 363 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மராட்டிய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், அங்கு கொரோனா கட்டுக்குள் வந்தபாடில்லை.

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மராட்டியம் தான் முதலிடம் வகிக்கிறது.  மராட்டிய மாநிலத்தில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி  1,80,298 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு சிறைக்கைதிகளும் தப்பவில்லை. இன்று காலை நிலவரப்படி மராட்டிய மாநிலத்தில் உள்ள சிறைகளில்  அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதேபோல், சிறை அலுவலர்கள் 102 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 255 கைதிகள்  பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.  சிறை அலுவலர்கள் 82 பேரும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் சிறைக்கைதிகள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  மாநிலத்திலேயே அதிகபட்சமாக மும்பை மத்திய சிறையில் உள்ள கைதிகள் 181 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த சிறையில் பணியாற்றும் 44 அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேற்கூறிய தகவல்களை மராட்டிய சிறைத்துறை தெரிவித்துள்ளது.

Next Story