மத்திய பிரதேசம்: புதிதாக 28 மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டனர்


மத்திய பிரதேசம்: புதிதாக 28 மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டனர்
x
தினத்தந்தி 2 July 2020 1:20 PM IST (Updated: 2 July 2020 1:20 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

போபால்,

மத்திய பிரதேசத்தில் ஆட்சி செய்து வரும் சிவராஜ் சவுகான் தலைமையிலான அமைச்சரவையில்  இன்று 28 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.  புதிதாக பதவியேற்றுக்கொண்ட மந்திரிகளுக்கு பமத்திய பிரதேசத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய பிரதேசத்தில் ஏப்ரல் மாதம் முதல்  5 அமைச்சர்களுடன் செயல்பட்டு வந்த அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.இன்று பதவியேற்றுக்கொண்டவர்களில் அண்மையில் பாஜகவில் இணைந்த  ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களும் அடங்குவர். 

Next Story