தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: புதிதாக 6,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 6,330 #COVID19 cases, 8,018 discharged & 125 deaths reported in Maharashtra today. Total number of cases in the state is now at 1,86,626, including 1,01,172 discharged & 8,178 deaths: State Health Department

மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: புதிதாக 6,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: புதிதாக 6,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் மேலும் 6,330 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை எட்டியே உயர்ந்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் நேற்று வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,74,761 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 6,330 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 626 பேரை கொரோனா தாக்கி உள்ளது. 

இதேபோல மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 125 பேர் பலியாகி உள்ளனர்.இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 178 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 8,018பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,01,172 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் இன்று மேலும் 6,997 பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் இன்று மேலும் 6,997 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியம்- ஆந்திராவில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு
மராட்டியம்- ஆந்திரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
3. மராட்டிய கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
மராட்டிய கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
4. மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 18,390 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 18,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.