மேற்கு வங்காளத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாகவே உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் நேற்று வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,770 ஆக இருந்தது
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்காளத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,819 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 16 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 699 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 509 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 13,037 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 6,083 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story