இந்தியாவில் 5 லட்சமாக இருந்தகொரோனா பாதிப்பு 5 நாட்களில் 6 லட்சமாக உயர்வு


இந்தியாவில் 5 லட்சமாக இருந்தகொரோனா பாதிப்பு 5 நாட்களில் 6 லட்சமாக உயர்வு
x
தினத்தந்தி 3 July 2020 6:16 AM IST (Updated: 3 July 2020 6:16 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல பரவி வருகிறது. கடந்த மாதம் 27-ந் தேதி வரை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளான 19 ஆயிரத்து 148 பேருடன் சேர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 4 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் 5 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு 5 நாட்களில் 6 லட்சமாக உயர்ந்துள்ளது. 

Next Story