உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் - இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு


உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் - இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
x
தினத்தந்தி 5 July 2020 3:23 PM IST (Updated: 5 July 2020 3:23 PM IST)
t-max-icont-min-icon

உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவம் இடையே நடந்த மோதல் காரணமாக இரு நாடுகளின் உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தடை விதித்தது.

இந்த நிலையில் உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் என இந்திய இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது;-

“உங்களிடம் இதுபோன்ற தயாரிப்பு இருந்தால் அல்லது இதுபோன்ற தயாரிப்புகளை உருவாக்குவதற்கான பார்வை மற்றும் நிபுணத்துவம் உங்களிடம் இருப்பதாக உணர்ந்தால் இந்த சவால் உங்களுக்கானது. தொழில்நுட்ப சமூகத்தில் உள்ள எனது நண்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உலகத்தரம் வாய்ந்த செயலிகளை இந்திய இளைஞர்கள் உருவாக்க வேண்டும்.

இன்று, ஒட்டுமொத்த தேசமும் ஒரு சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, அவர்களின் முயற்சிகளுக்கு வழிகாட்டுதலையும், அவர்களின் கடின உழைப்புக்கு வேகத்தையும், நமது சந்தையை திருப்திப்படுத்தக்கூடிய பயன்பாடுகளை உருவாக்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story