டெல்லியில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்


டெல்லியில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்
x
தினத்தந்தி 5 July 2020 7:37 PM IST (Updated: 5 July 2020 7:37 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இன்று மேலும் 2,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புகளில் முதலிடத்தில் மராட்டியமும், இரண்டாவது இடத்தில் தமிழகமும் உள்ளது. அதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இன்று மேலும் 2,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 99,444 ஆக உயர்ந்து உள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 63 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலியானோர் எண்ணிக்கை 3,067 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்று ஒரே நாளில் 3,083 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 339 ஆக உள்ளது. மேலும் 25,038 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story