மராட்டியத்தில் கொரோனாவை நிச்சயம் தோற்கடிப்போம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே


மராட்டியத்தில் கொரோனாவை நிச்சயம் தோற்கடிப்போம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 7 July 2020 7:17 AM IST (Updated: 7 July 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனாவை நிச்சயம் தோற்கடிப்போம் என்று அம்மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்தார்.

மும்பை,

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மும்பையில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக மும்பை மாநகராட்சி மற்றும் டாடா குழுமம் ஆகியவை இணைந்து செயல்படுத்தும் பிளாஸ்மா சிகிச்சை திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு 20 ஆம்புலன்ஸ், 100 வெண்டிலேட்டர்கள் மற்றும் ரூ.10 கோடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்கிறோம். மக்களும், பெரிய தொழில்முனைவோர்களும் அரசாங்கத்துடன் தோளோடு தோள் கொடுத்து போராடி வருகின்றனர். எல்லோரும் அயராது உழைக்கிறோம். இது வெற்றியை உறுதி செய்யும். நாம் கொரோனாவை தோற்கடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மந்திரி ஆதித்ய தாக்கரே, இந்த ஆம்புலன்சுகள் மற்றும் வென்டிலேட்டர்களை பயன்படுத்தும் நேரம் வரக்கூடாது என பிரார்த்தனை செய்கிறேன்.

ஆனால் அவை தேவைப்படும் நேரத்தில் உயிர்களை காப்பாற்ற பயனுள்ளதாக இருக்கும், என்றார்.

Next Story