இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது


இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 7 July 2020 9:44 AM IST (Updated: 7 July 2020 9:44 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது.

புதுடெல்லி,

இந்தியாவில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி பாதிப்பு சராசரியாக 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 22,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 467 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,19,665- ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,160 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,39, 948 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்புடன் நாடு முழுவதும் 2,59, 557 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜூலை 6 ஆம் தேதி வரை 1 கோடியே 2 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


Next Story