ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: தெலுங்கானா தலைமைச் செயலகத்தை இடிக்கும் பணி தொடக்கம்

ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: தெலுங்கானா தலைமைச் செயலகத்தை இடிக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 8 July 2020 7:19 AM IST (Updated: 8 July 2020 7:19 AM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்ட பின்னர் அமராவதியில் ஆந்திர மாநிலத்துக்கு மிக பிரம்மாண்ட தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.

ஐதராபாத்,

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்ட பின்னர் அமராவதியில் ஆந்திர மாநிலத்துக்கு மிக பிரம்மாண்ட தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.

அதேபோல் தெலங்கானாவிலும் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள பழைய தலைமைச் செயலகத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்தார்.

ஆனால் பழைய தலைமைச் செயலக கட்டிடத்தை இடிப்பதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக தெலுங்கானா ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

நீண்ட கால விசாரணைக்கு பிறகு தலைமைச் செயலக கட்டிடத்தை இடிப்பதற்கு ஒப்புதல் வழங்கி தெலுங்கானா ஐகோர்டு அண்மையில் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் ஐகோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து தலைமைச் செயலக கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story