கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 8 July 2020 5:16 AM GMT (Updated: 8 July 2020 5:16 AM GMT)

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரேசில் நாட்டு அதிபராக இருப்பவர் ஜெயிர் போல்சனரோ. கொரோனா வைரசால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்தவர். மேலும், கொரோனா வைரசை ’இது ஒரு சிறிய காய்ச்சல்’ தான் என கூறி பரபரப்பை ஏற்படுயவராவார்.

பிரேசிலில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையிலும் மக்கள் லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும். மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என தொடர்ந்து போல்சனரோ பேசி வந்தார்.

 கொரோனா வைரசை சர்வ அலட்சியமாக கையாண்ட பிரேசில்அதிபர் போல்சனரோவுக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான அறிகுறிகளுடன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.  மேலும், கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை எனவும், அலுவலக பணிகளை வீடியோ காண்பிரன்ஸ் மூலமாக மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபருக்காக  இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும், விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story