லாத்தூரில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா


லாத்தூரில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 July 2020 7:44 AM IST (Updated: 9 July 2020 7:44 AM IST)
t-max-icont-min-icon

லாத்தூரில் பா.ஜனதா எம்.எல்.ஏ.அபிமன்யு பவாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டியே வருகிறது. 

மராட்டியத்தில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் இந்த நோய்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

அந்த வரிசையில் லாத்தூரில் உள்ள அவுசா தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. அபிமன்யு பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story