இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 2.6 லட்சம் கொரோனா பரிசோதனைகள்; ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பு
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 2.6 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என ஐ.சி.எம்.ஆர். அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவால் 7.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 21,129 ஆக உயர்வடைந்து உள்ளது. எனினும், மக்கள் தொகை அடர்த்தியுடன் ஒப்பிடும்பொழுது, அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், இந்தியா குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக அளவிலான கொரோனா பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை (ஐ.சி.எம்.ஆர்.) சேர்ந்த விஞ்ஞானி நிவேதிதா குப்தா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, நாட்டில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சராசரியாக ஒரு நாளைக்கு 2.6 லட்சம் மாதிரிகளை நாங்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம். ஆன்டிஜென் பரிசோதனை செய்யப்படும்பொழுது, இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story