உத்தர பிரதேசத்தில் நாளை முதல் திங்கள்கிழமை வரை கடும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு


உத்தர பிரதேசத்தில் நாளை முதல் திங்கள்கிழமை வரை கடும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 9 July 2020 10:06 PM IST (Updated: 9 July 2020 10:06 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் நாளை இரவு முதல் 13 ஆம் தேதி காலை வரை கடும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாளை இரவு 10 மணி முதல் 13 ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 4 மணி வரை கடும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு 10,373 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 21,127 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களிலும் ஊரடங்கு மிக கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அத்தியாவசிய தேவை தவிர பிற அனைத்து போக்குவரத்துகளும் தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், கடைகள் மற்றும் சந்தைகள் அனைத்தும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story