காஷ்மீரின் நவுகம் செக்டரில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீரின் நவுகம் செக்டரில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 11 July 2020 9:17 AM IST (Updated: 11 July 2020 9:17 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரின் நவுகம் செக்டரில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் .

புதுடெல்லி

வடக்கு காஷ்மீரின் நவுகம் செக்டரில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே சனிக்கிழமை காலை இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது 

இன்று அதிகாலை பாரமுல்லாவில் உள்ள நவுகம் செக்டரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்று பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை தொடர்ந்து பாதுகப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லபட்டனர். அவர்களிடம் இருந்த இரண்டு ஏ.கே .47 துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கைபற்றப்பட்டன என்று கூறினார்.


Next Story