இந்தியாவில் புதிய உச்சம்: கடந்த 24 மணி நேரத்தில் 27,114 -பேருக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் புதிய உச்சம்: கடந்த 24 மணி நேரத்தில் 27,114 -பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 11 July 2020 9:59 AM IST (Updated: 11 July 2020 9:59 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.  இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  8,20,916-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,114 -பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒருநாளில்  பதிவாகும் உச்சபட்ச எண்ணிக்கை இதுவாகும்.  அதேபோல், கடந்த ஒரு 24 மணி நேரத்தில் 519 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,123- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5,15,386     - ஆக உள்ளது. அதேபோல், நாடு முழுவதும் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,83,407  - ஆக உள்ளது.    

Next Story