100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது: ரிசர்வ் வங்கி ஆளுநர்


100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது: ரிசர்வ் வங்கி ஆளுநர்
x
தினத்தந்தி 11 July 2020 7:42 AM GMT (Updated: 11 July 2020 7:42 AM GMT)

கொரோனா தொற்று நெருக்கடியால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும்  கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 100- நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. வைரஸ் பரவல் கட்டுக்குள் வராவிட்டாலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார மாநாட்டில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:- “கொரோனா  தொற்று  சுகாதாரம், பொருளாதாரம், மக்களின் நல்வாழ்வு, வேலை வாய்ப்பு போன்றவற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத தாக்கத்தினையும் எதிர்மறையான மாற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

நமது பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தளர்வுகளுக்கு பிறகு பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான குறியீடுகளை வெளிப்படுத்துகிறது” என்றார்.


Next Story