டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து- மனிஷ் சிசோடியா அறிவிப்பு


டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து- மனிஷ் சிசோடியா அறிவிப்பு
x
தினத்தந்தி 11 July 2020 1:28 PM IST (Updated: 11 July 2020 1:31 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக  அம்மாநில துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள மனிஷ் சிசோடியா, “ கொரோனா அச்சுறுத்தலால் டெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யும் மதிப்பீடு அளவுகளை அடிப்படையாக கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ள்ளார்.

நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் டெல்லி மூன்றாம் இடம் வகிக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தரவுகளின் படி டெல்லியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,09,140- ஆக உள்ளது. 

Next Story