உயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு தொடர்பான வழிகாட்டுதல்கள் - மத்திய மனிதவள அமைச்சகம் வெளியீடு


உயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு தொடர்பான வழிகாட்டுதல்கள் - மத்திய மனிதவள அமைச்சகம் வெளியீடு
x
தினத்தந்தி 11 July 2020 5:20 PM IST (Updated: 11 July 2020 5:20 PM IST)
t-max-icont-min-icon

உயர்கல்வி தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

உயர்கல்வி தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அனைத்து  தேர்வுகளையும் நடத்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

அதன்படி கல்லூரி தேர்வுகள், நீட் மற்றும் பொறியியல் நுழைவு தேர்வுகளை ஆன்லைன் மூலமும் நேரடி தேர்வாகவும் நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக இறுதி தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் சிறப்புத் தேர்வு நடத்தவும் மனிதவள அமைச்சகம் வழிகாட்டியுள்ளது. 

Next Story