டெல்லியில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய முடிவு - துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவிப்பு
டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் கல்லூரித் தேர்வுகள் நடைபெறாமல் இருக்கும் நிலையில், பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கொரோனா அச்சுறுத்தலால் டெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யும் மதிப்பீடு அளவுகளை அடிப்படையாக கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ள்ளார்.

Related Tags :
Next Story